தைப்பூசம்: ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!

Singapore thaipusam
Singapore Thaipusam

ஆண்டுதோறும் சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் (Sri Thendayuthapani Temple) தைப்பூசம் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி அன்று தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் நிர்வாகமும், இந்து அறக்கட்டளை வாரியமும் செய்து வருகிறது.

சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விளக்கம் அளித்த ஸ்கூட் நிறுவனம்!

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில், “இந்துக்களின் பண்டிகையான் தைப்பூசம் தமிழ் மாதமான தை மாதத்தில் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் போது, பக்தர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலுக்கு சுமார் 4 கி.மீ. தூரம் நடைப்பாதையாக செல்வர்.

தைப்பூச ஊர்வலம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) இருந்து வரும் பிப்ரவரி மாதம் 4- ஆம் தேதி அன்று இரவு 11.30 PM மணிக்கு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலின் கதவு வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.01 AM மணிக்கு திறக்கப்படும். அனைத்து பக்தர்களும் தங்களது நடைப்பயணத்தை முடித்துவிட்டு, தைப்பூச தினமான (05/02/2023) அன்று இரவு 11.00 PM மணிக்குள் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலை அடைய வேண்டும்.

தைப்பூசம் போன்ற திருவிழாக்களில் பக்தர்களின் வசதியும், பாதுகாப்பும் முதன்மையானவை. பக்தர்கள் வீதிகளில் செல்லும்போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பொது ஒழுங்கைப் பராமரிக்க உதவுமாறு அன்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள். தைப்பூச நாளில் மதியம் 12.00 PM மணி முதல் மாலை 03.00 PM வரை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் அன்னதானம் கிடைக்கும்.

தீவு விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து- ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!

பால் குடம், ரத காவடி, அழகு காவடி, பால் காவடி, தொட்டில் காவடி உள்ளிட்டவைகளை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் அதற்கான கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://thaipusam.sg/ (or) https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.