இதுதான் நம்ம சிங்கப்பூர்…தைப்பூச திருவிழாவை உலகநாடுகளின் பாரம்பரிய கலாசார மரபு பட்டியலில் சேர்க்க பரிந்துரை!

Singapore thaipusam
Singapore Thaipusam

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர் தமிழ் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாப்பப்படும் விழா என்பது குருப்பிடத்தக்கது.

இந்த நிலையில், UNESCO உலகநாடுகளின் பாரம்பரிய கலாசார மரபு பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கப்படும் சிங்கப்பூர் பட்டியலில் தைப்பூச திருவிழா மற்றும் சிங்கே அணி வகுப்பு உள்ளிட்ட எட்டு கூறுகள் இடம்பெற்றுள்ளது.

“முடிவில்லா நோய்” வகையில் கோவிட்-19 ஐ சேர்த்த நாடு – பயணிகளுக்கு நீக்கப்படவுள்ள சோதனை தேவைகள்!

கலாசார மரபுடைமைக்கான UNESCO-வின் பிரதிநிதிப் பட்டியலில் இடம்பெறக்கூடிய நாட்டின் இரண்டாவது பரிந்துரையை முடிவு செய்வதற்கு முன்னர், தேசிய மரபுடைமைக் கழகம் வரும் மாதங்களில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கும் என கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் லோ யென் தெரிவித்தார்.

சீன கெத்தாய் நிகழ்ச்சி, பாரம்பரிய மருத்துவம், சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான நடைமுறைகள், யுஷெங், அதனுடன் தொடர்பு உடைய உணவு பாரம்பரியம் மற்றும் சமூக நடைமுறைகள் உள்ளிட்டவையும் சிங்கப்பூர் பரிந்துரைத்த
10 கூறுகளில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சகம் நேற்று (மார்ச் 10) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்