சிங்கப்பூர் செய்திகள்

“சுகாதார விழா – 2019” இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.!

The annual Health Festival which is jointly organised by Hindu Endowments Board and Mediacorp Oli 96.8 (Photo : Hindu Endowments Board)

இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் ஒலி 96.8 ஆகியவை இணைந்து நடத்தும் ‘சுகாதார விழா 2019’ – இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.

கடந்த நான்கு ஆண்டுகள் வெற்றியை தொடர்ந்து இவ்வாண்டும் இந்த சுகாதார விழா நடத்தப்பட இருக்கிறது.

இந்த மருத்துவ பரிசோதனை விழாவில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கண், காது, பல் என பல வகையான பிரச்சினைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும்.

மேலும், நான் பட்ட நோய்களுக்காக பரிசோதனையும் நடைபெறும், அதாவது 40 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நீரிழிவு, இரத்தக்கொதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் உண்டு.

இங்கு அனைத்து வித பரிசோதனைகளும் முற்றிலும் இலவசம். இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நடைபெறும் நாள்:

ஜூலை 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

நடைபெறும் இடம்:

பி.ஜி.பி மண்டபம், 397 சிராங்கூன் சாலை, சிங்கப்பூர் – 218123

மேலதிக தகவலுக்கு: www.heb.org.sg

Related posts