ICA ஆணையத்தின் புதிய சேவை நிலைய கட்டுமானப் பணிகள் தொடக்கம்..!

The centre will integrate digital systems with biometric and automation technologies. (Image: ICA)

சிங்கப்பூரில் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் புதிய சேவை நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவையை வழங்க, அங்க அடையாளத் தொழில்நுட்பம், தானியக்கத் தொழில்நுட்பம் போன்ற மின்னிலக்க முறைகளைப் புதிய நிலையம் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் அதே சமயத்தில் வசதியான, பாதுகாப்பான சேவைகளை வழங்க ஆணையம் முன்னெடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நிலையத்தை அமைப்பதை தொடர்ந்து, தற்போதைய கட்டடத்துக்கு அருகில் உள்ள நகரச் சீரமைப்பு ஆணையத்தின் கார் நிறுத்தும் இடம் இந்த ஆண்டு இறுதியோடு செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

கட்டுமானப் பணி இடம்பெறும் காலத்தில், ஆணையத்தின் வளாகத்துக்குச் செல்வோர், பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். புதிய நிலையம் 2023ஆம் ஆண்டுக்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.