சிங்கப்பூரில் படித்த உடனே நிரந்தர வேலை வாய்ப்புகளைப் பெற்ற புதிய பட்டதாரிகள் – கணக்கெடுப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள்

graduates get jobs in singapore

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள சமீபத்திய பட்டதாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் சமீபத்தில் புதிதாக பட்டம் பெற்றவர்களில் பகுதியளவு மாணவர்கள் தங்களது தேர்வை முடித்த ஆறு மாதங்களுக்குள் முழு நேர வேலையை கண்டுபிடித்துள்ளனர்.

Skills Future Singapore (SFS) மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு வியாழக்கிழமை (April 14) வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 46.4 சதவீதம் பேர் படிப்பை முடித்த சிறிது காலத்திலேயே நிரந்தர முழு நேர வேலைகளை பெற்றுள்ளனர் என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் 49% சதவீதமாக இருந்ததிலிருந்து தற்பொழுது சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

முழு நேர வேலைகளை பெற்றுள்ள PEI பட்டதாரிகளின் சதவீதம் சரிந்தாலும், பகுதிநேர மற்றும் Freelance வேலைகள் உட்பட 85.3 சதவீதத்தினர் பணிபுரிகின்றனர். இது முந்தைய கணக்கெடுப்பை விட சற்று அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் (Autonomous) உள்ள பட்டதாரிகளை விட PEI பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதங்கள் மிக குறைவாக இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது .அதாவது தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 94.4 சதவீதமாக இருந்துள்ளது.

தனியார் மற்றும் தன்னாட்சி பல்கலைக்கழக மாணவர்களிடையே எப்போதும் ஒரு இடைவெளி இருந்து வருவதாக தேசிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இணைப்பேராசிரியர் Jason Tan குறிப்பிட்டுள்ளார்.