பாலியல் சேவைக்கு பணம் தருவதாக வலையில் சிக்கவைத்து இன்பம் அனுபவித்த ஆடவருக்கு சிறை

Photo: Getty

பணக்கார முதியோர்களின் பாலியல் இச்சையை பூர்த்தி செய்பவர்களுக்கு பணம் தருவதாக கூறி குறைந்­த­பட்­சம் 11 பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டி பீர்ஸ் வோங் தியன் ஜூன் (வயது 39) என்பவருக்கு 11 பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் S$20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி!

தம் மீது சுமத்தப்பட்ட மோசடி, அச்சுறுத்தல் போன்ற 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மேலும் 26 குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணக்கார முதியோர்களுக்கு பாலியல் சேவை செய்ய இளம்­பெண்­கள் தேவை என்று ஒரு விளம்பரத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்டு 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 11 பெண்கள் சேவை செய்ய பதிலளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தேவைகளை நிறைவேற்ற மாதந்தோறும் S$8,000 முதல் S$20,000 வரை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை வோங் கூறியுள்ளார்.

மேலும், தங்களுடைய தகுதியை நிரூபிக்கும் வகையில் தம்மிடம் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும் என்றும் கூறி அப்­பெண்­களை அனுபவித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.

தம்மிடம் ஈடுபட்ட பாலியல் காட்சிகளை பட­மா­க­வும் காணொ­ளி­யா­க­வும் எடுத்து மேலும் மேலும் உறவு கொள்ளுமாறு அப்பெண்களை வோங் மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது.

வோங் தன்னுடைய சொந்த பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்ய பெண்களை பலவாறு ஏமாற்றிய பலதரப்பட்ட குற்றவாளி என நீதிபதி ஜான் இங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகளில் இவர்களுக்கு சிங்கப்பூர் வரத் தடை