‘திருடன் கையிலேயே ஏடிஎம் கார்டு ’ – இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சிங்கப்பூரில் கைவரிசை

JUDGEMENT

சிங்கப்பூரில் லதா நாராயணன் (59) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் , ஒரு 65 வயதான குடியிருப்பாளரின் ஏ டி எம் கார்டை திருடி பணத்தை எடுத்தது மட்டுமின்றி கார்டை பயன்படுத்தி பல்பொருள் அங்காடியில் உணவு வாங்கியது மற்றும் கழிப்பறையை பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு செலவழித்த நர்சிங் ஹோம் ஊழியரான லதாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் கேர் ஹோமில் 2019-ஆம் ஆண்டில் சுகாதார உதவியாளராக பணிபுரிந்த லதா வயதான நோயாளியை பராமரிக்க நியமிக்கப்பட்டார். பின்னர் 2021-ஆம் ஆண்டில் வயதான நோயாளி இறந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் அட்டையின் பின் நம்பரை அடிக்கடி மறந்து விடுவதாக கூறி புதிய பின் நம்பரை பெறுவதற்கு ,லதாவுடன் வாங்கிக்குச் சென்றதாக கூறப்படுகிறது .

லதாவின் முன்னிலையில் புதிய பின் நம்பரை பெற்ற நபர் அட்டையை தொலைபேசியின் பின்னால் வைத்து பாதுகாப்பிற்காக தொலைபேசியை லதாவிடம் கொடுத்துள்ளார் .

நோயாளியின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய லதா, ATM அட்டையை பயன்படுத்தி ஆயிரம் சிங்கப்பூர் டாலரை எடுத்துள்ளார்.மேலும் நவம்பர் 25-ஆம் தேதி அட்டையை பயன்படுத்தி கழிவறையை உபயோகப்டுத்தியதோடு உணவு வாங்கியுள்ளார்.

நவம்பர் 27-ஆம் தேதி அந்த முதியவர் தனது வங்கி கணக்கிலிருந்து அனுமதியின்றி பணம் எடுக்கப்படுவதாகவும் அட்டையை தொலைத்து விட்டதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார். இதனை அடுத்து லதாவின் திருட்டு செயல்கள் காவல்துறையினரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப் பட்டது.