சிங்கப்பூரில் கோவிலுக்குள் புகுந்து சிலையை திருடியதாக ஒருவர் கைது..!

Man linked knife attack

சிங்கப்பூரில் கேலாங் ரோட்டில் அமைந்துள்ள கோவிலுக்குள் புகுந்து சிலையைத் திருடியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு 9 சிலைகள் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் குணமடைந்தோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!

சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 27-ம் தேதி அன்று பிற்பகல் 2 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

அதைத் தொடர்ந்து ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான படங்களைக் கொண்டு சந்தேக நபர் அன்றே கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நபருக்கு 37 வயது என்றும், அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க, வெளியே செல்லும்போது கதவு மற்றும் சன்னல்களைப் பூட்டாமல் விட்டுச் செல்லவேண்டாம், அதிகமான ரொக்கத்தைக் கட்டடத்திற்குள் வைத்துச் செல்ல வேண்டாமென்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Source: Seithi

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 காரணமாக அதிகமானோர் வேலை இழக்கலாம் – MAS..!!