போலியான ரோலக்ஸ் கடிகாரத்தை வைத்து, 2 ஒரிஜினல் ரோலக்ஸ் உடன் தப்பி ஓடிய பலே திருடன்.!

கடந்த புதன் கிழமை அன்று மதிய வேளையில், இளைஞர் ஒருவர் Far East Plaza வில் இரண்டாம் நிலை கடிகாரம் விற்பனை கடைக்குள் போலியான ரோலக்ஸ் கைக்கடிகாரம் அணிந்து கொண்டு சென்றுள்ளான்.

பிறகு, அந்த கடையில் ஒரிஜினல் 2 ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து கொண்டு கடையை விட்டு தப்பி ஓடி விட்டதாக கடைக்காரர் கூறியுள்ளார்.

அந்த ரோலக்ஸ் ஒன்றின் மதிப்பு $150000 வெள்ளி ஆகும். கடைக்காரரிடம் அந்த இளைஞர் ரோலக்ஸ் கடிகாரம் வாங்க வந்ததாக கூறி அவரிடம் கடிகாரங்களை எடுத்து காட்டும் படி கூறிவிட்டு, அதன் பின்னர் கடைக்காரர் அவரிடம் உள்ள வகைகளை எடுத்து காட்ட தொடங்கியவுடன், இளைஞர் வைரம் பதித்த ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து கொண்டு கடையை விட்டு தப்பி ஓடி விட்டதாக, அந்த கடைக்காரர் கூறியுள்ளார்.

அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கேமரா காணொளி பதிவில், அந்த இளைஞர் தப்பி ஒடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Rolex கடிகாரத்தை எடுத்து கொண்டு ஓடிய இளைஞர்!

அப்பகுதி போலீஸார் அந்த பதிவில் இருந்த தப்பி ஓடும் இளைஞரின் முகத்தை அடையாளம் கண்டு அவரை தேடி வருகின்றனர்.