திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஸ்ரீ சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple) அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) கீழ் உள்ளது. இந்த கோயிலில் நாள்தோறும் 100- க்கும் அதிகமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

செமேரு எரிமலை வெடித்தது…. சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கார்த்திகை தீபம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று (06/12/2022) கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் இன்று (06/12/2022) நடைபெறுகிறது.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதன்படி, டிசம்பர் 6- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 07.00 மணிக்கு உபய பூஜையும் மற்றும் சொக்கப்பானையும், இரவு 07.30 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறும். இது தொடர்பான மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.