புதிதாக திறக்கப்பட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில் நிலையங்கள் – அலைமோதும் மக்கள் கூட்டம்

thomson-east-coast-line-stage-3-open-free-rides
LTA

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் (TEL) மூன்றாவது கட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணிகள் சேவைக்காக திறக்கப்பட்டது.

புதிதாக திறக்கப்பட்ட சிங்கப்பூரின் MRT ரயில் மற்றும் நிலையங்களின் புகைப்படங்களை எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

பயணிகளில் குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் ஆகியோர் புதிய பாதையில் ரயில் இயங்குவதை காண ஆர்வத்துடன் வந்து இருந்தனர்.

ஜாலான் பெசார் சாலையில் காவல்துறை வாகனம் மீது கார் மோதி விபத்து – மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி

பயணிகள் காலை 9 மணிக்கு கிரேட் வேர்ல்ட் நிலைய ரயிலில் ஏறி கார்டன்ஸ் பை தி பேக்கு உற்சாகத்துடன் பயணித்து சென்றனர்.

புதிதாக திறக்கப்பட்ட 11 நிலையங்கள்

  • ஸ்டீவன்ஸ்
  • நேப்பியர்
  • ஆர்ச்சர்ட் பவுல்வர்டு
  • ஆர்ச்சர்ட்
  • கிரேட் வேர்ல்ட்
  • ஹேவ்லாக்
  • உட்ரம் பார்க்
  • மேக்ஸ்வெல்
  • ஷென்டன் வே
  • மெரினா பே
  • கார்டன்ஸ் பை தி பே

பெண்ணிடம் ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி – ஒருவர் கைது