சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: India foreign minister Official Twitter Page

மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், கடந்த நவம்பர் 17- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை- டிசம்பருக்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கிய ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’!

அங்கு சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மூத்த அமைச்சர் மற்றும் சமூக ஒருங்கிணைப்புகளுக்கான அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித்துறை அமைச்சர் லாரன்ஸ் வோங், சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

அமைச்சர்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று (19/11/2021) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூரில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது, கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், தென்கிழக்காசியாவில் நிலவும் சூழல், இறக்குமதி, ஏற்றுமதி, சர்வதேச விவகாரங்கள், இந்தியா- சிங்கப்பூர் இடையேயான வர்த்தகம், இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

இந்த நிலையில் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (19/11/2021) விமானம் மூலம் இந்தியா திரும்பினார்.

சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

சிங்கப்பூர் பயணம் குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூருக்கு ஒரு பயனுள்ள மூன்று நாள் பயணம். இனிமையான நினைவுகள், உற்சாகமான சாத்தியங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.