“இந்தியாவில் மூன்று திறன் பயிற்சி மையங்களை நிறுவியுள்ளது சிங்கப்பூர்”- அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தகவல்!

"இந்தியாவில் மூன்று திறன் பயிற்சி மையங்களை நிறுவியுள்ளது சிங்கப்பூர்"- அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தகவல்!
Photo: Minister Dr Vivian Balakrishnan

 

 

மூன்று அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள இந்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Minister of Education and Skills Development and Entrepreneurship Dharmendra Pradhan), நேற்று (மே 30) பிற்பகல் 03.00 மணியளவில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை, அவரது இல்லத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிங்கப்பூரில் S$18,888 அதிஷ்ட பரிசுத் தொகையை தட்டிச்சென்ற தமிழக ஊழியர்!

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்தியாவின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மார்ச் மாதம் நான் டெல்லி சென்றிருந்த போது, நாங்கள் சந்தித்தோம். கல்வி மற்றும் திறன் மேம்பாடு நமது இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாகும்.

“விவாகரத்து வேண்டும்..” – கணவர் மீது கொதிநீரை ஊற்றி தாக்கிய மனைவி.. சிங்கப்பூர் வந்து பதுங்கி இருந்து மனைவி துணிகரம்

தொழில் நுட்பத்தின் மூலம் திறன் மேம்பாடு பயிற்சி குறித்து நாங்கள் விவாதித்தோம். சிங்கப்பூர், இந்தியாவில் மூன்று திறன் பயிற்சி மையங்களை நிறுவியுள்ளது.இது எதிர்கால வேலைகளுக்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள இளைஞர்களுக்கு உதவும். இரு தரப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்தவும், நமது மக்களிடையேயான உறவுகளை ஆழப்படுத்தவும் இந்தியாவுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.