சிங்கப்பூரில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் இந்த அபாயத்தில் உள்ளார்… TikTok, Instagram போன்ற சமூக ஊடங்களால் பாதிப்பு!

S’poreans who spend over 3 hours daily on TikTok, Instagram most at risk of body image anxiety
Pexels

சிங்கப்பூரில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் உடல் உருவத்தைப் பற்றிய கவலை கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், TikTok மற்றும் Instagram செயலியை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் செலவிடுபவர்களுக்கு அதுகுறித்த அபாயம் அதிகம் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

SCDF ஆம்புலன்ஸ், 2 கார்கள் விபத்து: 11 மாதக் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

இதில் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,670 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சிங்கப்பூரில் உள்ள பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக இரண்டரை மணிநேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியிடப்பட்ட ஆய்வில், உடல் உருவம் குறித்து தனிநபர் கவலையடையும் அபாயம் அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளின்படி, பதிலளித்தவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக தளங்களில் யூடியூப் முதலிடத்திலும், அதை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ட்விட்டர் ஆகியவையும் உள்ளன.

ஜூரோங் ஈஸ்ட்டில் மரணத்தை ஏற்படுத்திய தீ விபத்து: அதே வீட்டில் மீண்டும் தீ – சோகத்துக்கு மேல் சோகம்