சிங்கப்பூரில் கடையைத் திறந்த ‘Tim Hortons’ நிறுவனம்!

சிங்கப்பூரில் கடையைத் திறந்த 'Tim Hortons' நிறுவனம்!
Photo: Mothership

 

கனடா நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ‘Tim Hortons’. இது ஒரு உணவு தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், விதவிதமான ஐஸ்கிரீம்கள், விதவிதமான கேக்குகள், பீட்சா, பர்க்கர், காப்பிகள், குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது.

குறிப்பிட்ட 7 இடங்களுக்கு ERP கட்டணங்கள் இல்லை – குறிப்பிட்ட கால நேரத்தில் இலவசமாக பயணிக்கலாம்

இந்த ‘Tim Hortons’ நிறுவனம், சிங்கப்பூரில் தனது முதல் கடையை இன்று (நவ.17) திறந்துள்ளது. இந்த கடை ‘VivoCity’ கடைத்தொகுதியில் அமைந்துள்ளது. திறப்பு விழா சலுகையாக நவம்பர் 17- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை கடைக்கு வரும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ‘Cafe Latte’ இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும். அதேபோல், சிங்கப்பூரில் மேலும் மூன்று இடங்களில் கடையின் கிளைகளைத் திறக்க ‘Tim Hortons’ முடிவுச் செய்துள்ளதாகவும், அந்த கடைகள் அனைத்தும் படிப்படியாகத் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயிலில் ‘கந்தசஷ்டி திருவிழா’ கோலாகலம்!

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு நிறுவனங்களின் ஒன்றான ‘Tim Hortons’ நிறுவனத்தின் கடைக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.