புகையிலை பொருட்களை இனி சுகாதாரம் குறித்த எச்சரிக்கை படத்துடன் கண்டிப்பாக விற்பனை செய்ய வேண்டும்!

Tobacco products sold in Singapore must have standardised packaging and enlarged graphic health warnings

சிங்கப்பூரில் புகையிலை பொருட்கள் இனி கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ள பேக்குகளில் சுகாதாரம் குறித்த பெரிய எச்சரிக்கை படத்துடன் விற்பனை செய்ய வேண்டும், என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

புகையிலை பொருட்களில் இடம்பெற வேண்டிய அந்த முக்கிய எச்சரிக்கை படத்தின் வடிவமைப்பை ஜூலை 1 ஆம் தேதி அறிக்கையில் MOH தெரிவித்துள்ளது.

இதில் சிகரெட், சிகாரில்லாஸ், சிகார்ஸ், பீடிகள் மற்றும் ஹூன் போன்ற பாதிப்பை ஏற்படுத்த கூடிய புகையிலை பொருட்கள் அடங்கும்.

புகையிலை பொருளின் நிறம், படம் மற்றும் விளம்பர தகவல்கள் பேக்கில் இடம் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு மற்றும் நிறுவன பெயர் மட்டும் MOH வரையறுத்துள்ள எழுத்து வடிவத்திலும், நிறத்திலும் இருக்க வேண்டும். லோகோ பயன்படுத்த அனுமதி இல்லை.

புகையிலை பேக்கில் சுகாதாரம் குறித்த எச்சரிக்கை படம் குறைந்த அளவு 50 சதவிகிதத்தில் இருந்து 75 சதவீதம் அதிகரித்துள்ளது.