இந்தியாவில் தங்கம் போல் எகிறும் தக்காளி விலை… சிங்கப்பூரில் பாதிப்பு இருக்குமா? – லிட்டில் இந்தியாவில் நிலை என்ன?

இந்தியாவில் தங்கம் போல் எகிறும் தக்காளி விலை... சிங்கப்பூரில் பாதிப்பு இருக்குமா? - லிட்டில் இந்தியாவில் நிலை என்ன?

இந்தியாவின் சில பகுதிகளில் தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தக்காளியின் விலை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை, தாமதமாக பெய்த மழை மற்றும் வைரஸ் காரணமாக தக்காளி வரத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை ஆகியவை அதன் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இரும்பு கட்டமைப்பு விழுந்து இந்திய ஊழியர் மரணம்: கட்டமைப்பு எடை 560கி… நிறுவனத்துக்கு செக்

ஒரு கிலோ தக்காளியின் விலை பொதுவாக 30 அல்லது 40 ரூபாய்க்கு விற்பனை ஆகும், ஆனால் ஜூன் தொடக்கத்தில் இருந்து அதன் விலை ஆறு மடங்கு உயர்ந்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை ஆவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தக்காளி என்பது தமிழர்களின் பிரதான சமையல் தேவையாக உள்ளது. இந்த விலையேற்றத்தால் சிலர் தக்காளியை பிரதான உணவு பட்டியலில் இருந்து தள்ளிவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரிலும் இந்த விலையேற்றம் குறித்த கலக்கம் பொதுமக்களிடையே காணப்படுகிறது.

சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து பல்வேறு காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன, ஆனால் தக்காளி மட்டும் பெரும்பாலும் மலேசியாவில் இருந்து இறக்குமதி ஆகிறது.

பொதுவாக சிங்கப்பூரில் S$1.80 முதல் S$2 வரை விற்கப்படும் ஒரு கிலோ தக்காளியின் விலை, கடந்த வாரம் S$3.80 க்கு விற்பனையானதால் பொதுமக்கள் கவலை கொண்டனர்.

இருப்பினும், இறக்குமதியில் தடங்கல் இல்லாத காரணத்தால், தக்காளியின் விலை அதன் பின்னர் கட்டுக்குள் வந்து பழைய விலைக்கே திரும்பியது.

லிட்டில் இந்தியாவிலும் அதே போல விலை ஏற்றம் இருந்ததாகவும் ஆனால் பின்னர் அது இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் அங்குள்ள கடைக்காரர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய சாதனை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்