சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு

Toto Hong Bao Draw

Toto Hong Bao Draw: டோட்டோ ஹாங் பாவோ டிரா குலுக்கலில் பங்குகொள்ள சிங்கப்பூரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

$12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகையை தட்டிச்செல்ல வேண்டும் என்ற முனைப்போடு TOTO வாடிக்கையாளர்கள் மால் ஒன்றின் முழு தளத்தையும் சுற்றி வரிசையாக நின்றனர்.

வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்

Toto Hong Bao Draw குலுக்கலில் இந்த ஆண்டுக்கான முதல் பரிசு $12 மில்லியன் என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

சோவா சூ காங்கில் உள்ள லாட் ஒன் ஷாப்பர்ஸ் மாலின் மூன்றாவது மாடியில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) கடையில் புதன்கிழமை (பிப்ரவரி 1) மாலை 4.50 மணிக்கு மக்கள் வரிசையில் நிற்கும் காட்சிகள் வலைத்தளத்தில் தீயாக பரவியது.

சிங்கப்பூரில் மேலும் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டது, ஆன்லைனில் வெளியான வீடியோக்களால் மூலம் அதனை அறிய முடிந்தது.

இன்று வெள்ளிகிழமை (பிப் 3) இரவு 9.30 மணிக்கு மிடில் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கட்டிடத்தில் இதற்கான குலுக்கல் நடைபெறும்.

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி