சிங்கப்பூர் TOTO ஜாக்பாட் குலுக்கலில் S$1 டிக்கெட் வாங்கி S$5.5 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற அதிஷ்டசாலி!

Singapore Toto

சிங்கப்பூர் TOTO ஜாக்பாட் குலுக்கலில் வெறும் S$1 டிக்கெட் வாங்கிய ஒருவர், சுமார் S$5.5 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்றார்.

நேற்று ஜனவரி 6 ஆம் தேதி நடந்த TOTO குலுக்கலில் டாப் பரிசுத்தொகையான S$5.5 மில்லியன் வெற்றித்தொகையை ஒருவர் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூர் தைப்பூசம் 2023…. 30,000 பக்தர்கள், 200 காவடிகள்… பிரம்மாண்டமாக மீண்டும் வரும் தைப்பூசத் திருவிழா!

இதற்கான QuickPick டிக்கெட்டை Canberra Plazaல் அமைந்துள்ள FairPrice கடையில் அவர் வாங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த QuickPick Ordinary Entry நுழைவுக்கான பந்தய டிக்கெட்டின் விலை வெறும் S$1 ஆகும்.

இதில் ஒன்று முதல் 49 வரை ஆறு எண்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

மேலும் வெற்றித்தொகையை தட்டிச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எண்களும் வெற்றி எண்களுடன் பொருந்த வேண்டும்.

குரூப் 2 குழுவில் 17 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான பங்குத் தொகை S$68,374 என பிரித்து கொடுக்கப்படும்.

தவறான செயல்களுக்காக 7 பெண்கள் கைது – போலீசார் விசாரணை