தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் விபத்து: பெண் ஒருவர் மரணம்

தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் விபத்து: பெண் ஒருவர் மரணம்
Stomp

தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் (Tampines Expressway – TPE) ஏற்பட்ட விபத்தில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பான்-தீவு அதிவிரைவு சாலையை நோக்கி செல்லும் TPE சாலையில் திங்கட்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.

அதனை அடுத்து 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை 8 மணியளவில் விபத்து நடந்ததாகவும், ஒரு மினிபஸ் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வாகனம் ஓட்டிய 29 வயதான ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்தார்.

அதே நேரத்தில் பின்னாடி சவாரி செய்த பெண், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார்.

ஆனால் அதன் பின்னர் அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.