திருப்பி பெறப்பட்ட சுமார் 6,00,000 TraceTogether கருவிகள்

TraceTogether returned
(PHOTO: Online Citizen Asia)

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தொடர்புத் தடங்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்ட TraceTogether கருவிகள் திருப்பி வாங்கிக்கொள்ளப்பட்டது.

சுமார் 600,000 கருவிகள் பெற்றுக்கொண்டதாக தகவல் மற்றும் தொடர்பு அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.

இந்த கருவிகளை திருப்பிக் கொடுக்கும் கடைசி நாள் நேற்று முன்தினம் மார்ச் 12 அன்று முடிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வரும்காலத்தில் அதற்கான தேவை எழும் பட்சத்தில் அந்த கருவிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என திருமதி தியோ கூறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் சுமார் 2.6 மில்லியனுக்கும் அதிகமான கருவிகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.