“இது ஒன்றும் புதிதல்ல ” – சிங்கப்பூர் மலேசிய நாடுகளுக்கிடையேயான இணைப்பு சாலைகளில் நீண்ட வாகன வரிசைகள்

traffic jam in causeway

விடுமுறை காலம் என்றாலே சொந்த ஊருக்குச் செல்வது என்று மாணவர்கள் அனைவரும் இருப்பிடத்தை நோக்கி பயணிப்பது வழக்கமான ஒன்றாகும். ஜூன் மாதம் தொடங்கவில்லை எனினும், பள்ளி விடுமுறைக்கு முன்னதாக சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் காஸ்வே சாலையில் மே 28 அன்று நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.

சனிக்கிழமை அன்று (May 28) பேஸ்புக் பயனர் Dannie Tan காலை 9:40 மணி அளவில் காஸ்வே சாலையின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள படங்களில் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் முன்னோக்கி நகர்வதை காணமுடிகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை நோக்கி இரண்டு திசைகளிலும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நகர்ந்தன.

கனரக வாகனங்களான லாரி போன்ற சரக்கு வாகனங்கள் காஸ்வே சாலையில் சிங்கப்பூருக்கு செல்லும் திசைகளை நோக்கி நகர்ந்தன.அதேவேளையில் கார்கள் போன்ற சிறிய வாகனங்கள் பயணிகளுடன் மலேசியாவை நோக்கிச் சென்றன.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையதளமான ஒன் மோட்டாரிங் இரவு 7:35 மணிக்கு சாலையின் மற்றொரு காட்சியை வெளியிட்டது.அந்த காட்சியை போக்குவரத்து நெரிசல் சிறியதாக இருந்தது. சாலையில் வாகனத்தில் நீண்ட வரிசை குறைவாக காணப்பட்டது.

ஜோகூர் நோக்கிச் செல்லும் வாகனங்களின் வரிசைகள் நீண்டு இருப்பதாக காணப்பட்ட நிலையில் உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் சாலை தெளிவாகத் தெரிந்தது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் மலேசியா சில கட்டுப்பாடுகளுடன் நிலை எல்லையை மீண்டும் திறப்பதாக அறிவித்ததில் இருந்து சிங்கப்பூர் மலேசியா இடையேயான இணைப்புகளில் வாகனங்களில் மிகப்பெரிய வரிசைகள் காணப்படுவது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்