5 நாள் சோதனை நடவடிக்கை: போக்குவரத்து குற்றங்களுக்காக 71 ஓட்டுனர்களுக்கு சம்மன்

(PHOTO: Shin Min Daily News)

அதிவேகமாக சென்றது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக மொத்தம் 71 சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (எல்.டி.ஏ) அதிகாரிகளால் நடத்தப்பட்ட 5 நாள் சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பாக நடந்துவரும் பங்குனி உத்திரத் திருவிழா!

கூடுதலாக, சட்டவிரோதமாக வாகனங்களை மாற்றங்கள் செய்தது தொடர்பான 54 குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேகமாக செல்வது என்பது சிங்கப்பூரின் முதலிடத்தில் உள்ள போக்குவரத்து குற்றமாகும், கடந்த ஆண்டு சுமார் 162,324 வேக மீறல்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

வேகம் தொடர்புடைய விபத்துக்களின் எண்ணிக்கையில் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2019ல் 735 ஆக இருந்தது, கடந்த ஆண்டு 758ஆக உயர்ந்தது. அவற்றில் 27 விபத்துகள் அபாயகரமானது.

சாலைப் பாதுகாப்பு என்பது அனைவருக்குமான பொறுப்பு, அனைத்து சாலை பயனர்களும் உங்கள் பங்கை சிறப்புடன் ஆற்ற காவல்துறையால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிங்கப்பூரில் S$604 மில்லியன் செலவில் ஹவ்காங் சந்திப்பு நிலையம்