சில்வர் மண்டலம் (அ) பள்ளி மண்டலம் பகுதியில் வாகனம் ஓட்டுகிறீர்களா?

Photo: Land Transport Authority Official Facebook Page

 

சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் ‘தரைவழி போக்குவரத்து ஆணையம்’ (Land Transport Authority) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “சில்வர் மண்டலம் (Silver Zone) (அல்லது) பள்ளி மண்டலத்தில் (School Zone) வாகனம் ஓட்டுகிறீர்களா? வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளில் கவனமாக செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் குறைந்தபட்சம் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்வது போன்ற போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனை வாகன ஓட்டிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

சாலைகளில் செல்லும் முதியவர்கள், பள்ளி குழந்தைகள், சாலையில் செல்பவர்களை மேலும் பாதுகாக்கும் விதமாக இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ஜூலை 1- ஆம் தேதி முதல் சில்வர் மண்டலங்கள் மற்றும் பள்ளி மண்டலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் கூடுதல் குறைபாடு புள்ளிகள் (Additional Demerit Points), அதிக அபராதங்கள் உள்ளிட்டவையை எதிர்கொள்ள நேரிடும்” என வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.