புதிய போக்குவரத்து ஆப் மூலம் ஒரே நேரத்தில் கிராப், கோஜெக் மற்றும் அனைத்து போக்குவரத்து கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்!!

New Transport App Lets You Compare Grab, GoJek & Public Transport Prices At The Same Time

புதிய போக்குவரத்து ஆப் மூலம் ஒரே நேரத்தில் கிராப், கோஜெக் மற்றும் பொதுவான போக்குவரத்து கட்டணங்கள் அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

புதிய Zipster ஆப் ஒரே நேரத்தில் உங்கள் போக்குவரத்து பயணங்களை திட்டமிடவும், அதற்கான கட்டணங்களை ஒப்பிட்டு பார்க்கவும், அதன் பிறகு கட்டணங்களை செலுத்தவும் இப்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கட்டண விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க, முதலில் கோஜெக்கைத் திறந்து, அதன் பிறகு கிராப்பைத் திறந்து ஒப்பிட்டு பார்ப்போம். இது நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஆனால், இனி நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஒரே நேரத்தில் அனைத்து பயன்பாட்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

புதிதாக வந்துள்ள Zipster, ‘ஆல் இன் ஒன்’ போக்குவரத்து ஆப் ஆகும். இது பொது போக்குவரத்து, கிராப், கோஜெக் மற்றும் டாக்ஸிகளுக்கு இடையில் கட்டணங்களை ஒப்பீட்டு சிறந்த வழிகாட்டியை உங்களுக்கு வழங்கும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட போக்குவரத்து சேவை முறையை தேர்ந்தெடுக்கும் போது எவ்வளவு நேரம் ஆகும், என்பதையும் இந்த ஆப் உங்களுக்குத் தெரிவிக்கும்.