“கால்நடைகளை போல லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம், ஒரு தசாப்த கால பிரச்சினை” – லாரிகளுக்கு மாற்றாக மினிபேருந்து இருக்குமா?

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்ல மினிபேருந்து வசதியை முன்பதிவு செய்வதற்கான தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

லாரிகளுக்கு மாற்றாக மினிபேருந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் அது அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இங்குள்ள பல நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை ஏற்றிச் செல்ல லாரியை பயன்படுத்துகின்றன.

சிங்கப்பூரில் மொத்தம் 236 சந்தேக நபர்கள் மீது போலீசார் விசாரணை

தசாப்த கால பிரச்சினை

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள், இந்த போக்குவரத்து வழிமுறையின் பாதுகாப்பு பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியது.

ஆனால் உள்ளூர் நிறுவனங்கள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), ஊழியர்களுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு தடையாக உள்ளதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளன.

Aespadaஇன் நிறுவனர் திரு ஜீன் கிரிஸ்டோபி லி இதுபற்றி கூறுகையில்; “இந்த செயலியின் மினிபஸ் சேவையானது அத்தகைய நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது”, என்றார்.

“கால்நடைகளை போல லாரிகளில் ஊழியர்கள் பயணிக்கும் வழிமுறை ஒரு தசாப்த கால பிரச்சினை” என்று திரு லி கூறினார்.

குறிப்பாக, சமீபத்திய வாரங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது, அப்போது தங்களை மழையில் இருந்து காத்துக்கொள்ள ஊழியர்கள் குப்பைப் பைகளுக்குள் மறைந்து கொள்ள முயற்சிப்பதை நீங்கள் காணலாம், என்றார் அவர்.

கட்டணம்

தங்கள் ஊழியர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு உடனடி மாற்று விருப்பம் இந்த மினிபேருந்து சேவை என்றார் அவர்.

அந்த பேருந்துகள் ஏழு, ஒன்பது அல்லது 13 பணியாளர்களை ஏற்றிச் செல்லலாம் மற்றும் ஒவ்வொரு பயணமும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து S$55 முதல் S$65 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 25 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், நீண்ட கால, தினசரி பயணங்கள் மற்றும் “ஆன்-டிமாண்ட்” தற்காலிக சேவைகளுக்கான திட்டமும் இருப்பதாக திரு லி கூறினார்.

சிங்கப்பூர்-மலேசியா இடையே நில வழி பயணம்: குடும்பங்களைப் பிரிந்து வாடும் ஊழியர்களுக்கு முன்னுரிமை!