ரயில் சேவை தொடர்பாக போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd Official Facebook Page

 

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் முக்கிய பொது போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனம் (SPS Transit Ltd) ரயில் போக்குவரத்து சேவை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ரயில் சேவைகள் நம்பகமானதாகவும், வசதியாகவும் இருப்பதை உறுதிச் செய்வதற்காக செங்காங்- புங்க்கோல் (Sengkang- Punggol) எல்ஆர்டி (Light Rail Vehicles- LRVs) நெட்வொர்க்கில் பயணிகள் சேவை நேரங்களில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மே 22- ஆம் தேதி முதல் செப்டம்பர் 26- ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவை வழக்கம் போல் ஒரு வழித்தடத்தில் இயங்கும். மற்ற வழித்தடங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும். குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் இடையூரைக் குறைக்கும் வகையில் நீட்டிக்கப்பட்ட பொறியியல் நேரம் பகலில் ஹேக்கிங் பணிகளை மேற்கொள்ளும். பராமரிப்பு மற்றும் ரயில் சேவை தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.” இவ்வாறு ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.