ஜன. 1 முதல் சிங்கப்பூரில் இருந்து செல்ல முடியாது – தடை விதித்த நாடு

(PHOTO: AFF/ Rosalna Rahman)

Omicron கிருமி வகை காரணமாக, அனைத்து அத்தியாவசிய உள்வரும் மற்றும் வெளியூர் பயணங்களை புரூணை தற்காலிகமாக நிறுத்துகிறது.

இந்த புதிய பயண கட்டுப்பாடு வரும் ஜன. 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் புரூணை தெரிவித்துள்ளது.

மது போதையில் பேருந்து ஓட்டுநர், போலீசிடம் ரகளை – இந்தியருக்கு சிறை

பயணப் மேற்கொள்ளும் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் உட்பட அனைத்து நாடுகளும் ஜன. 1, 2022 முதல் நீக்கப்படும் என்று அது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த பயண தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அத்தியாவசிய தேவைகளுக்காக புரூணை செல்ல விரும்பும் வெளிநாட்டினர் Entry Travel Pass அனுமதி பெற வேண்டும்.

முன்னதாக, புரூணையில் நுழைவதற்கு முன், அனைத்து பயணிகளும் சொந்த நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

முகக்கவசம் அணியச் சொன்னது குத்தமா? – பேருந்து ஓட்டுனரை அடித்து தாக்கிய இருவர் (காணொளி)