சிங்கப்பூருக்கும் வந்துவிட்டதா குரங்கம்மை? – சாங்கி விமான நிலையம் வழியாக பயணித்த நபருக்கு உறுதிசெய்யப்பட்ட குரங்கம்மை

monkeypox

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பயணி ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று (June 2) சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வந்தடைந்த பயணி அங்கிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது தெரியவந்துள்ளது.ஜூன் 4ஆம் தேதி குரங்கு அம்மை பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது.

ஜூன் 1-ஆம் தேதி பார்சிலோனாவில் இருந்து புறப்பட்ட பயணி ஜூன் இரண்டாம் தேதி சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் ஜூன் மூன்றாம் தேதி சிட்னி சென்றடைந்தார். ஜூன் 4ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு காய்ச்சல் வழக்கு குறித்து சுகாதார அமைச்சகம் ஜூன் 6ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு புறப்படும் வரை அந்த பயணி விமான நிலையத்தின் போக்குவரத்து ஹோல்டிங் பகுதியில் காத்திருந்ததாகவும் விமான நிலையத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்லவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பயணி சிங்கப்பூருக்குள் நுழையாததால் மேலும் சமூகத்திலுள்ள மற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ளாததால் சிங்கப்பூரில் குரங்கு அம்மை பரவும் அபாயம் எதுவும் இல்லை என்று தெரிவித்தது.

பயணியுடன் நெருங்கிய தொடர்புகள் எதுவும் இல்லை என்பதால் தனிமைப் படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட நபருடன் தற்செயலாக தொடர்பு கொண்டிருந்த 13 பேர் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பில் 21 நாட்களாக வைக்கப்பட்டுள்ளனர்