சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

சிங்கப்பூர் வரும் பயணிகள் குறைந்த எண்ணிக்கையிலான COVID-19 சுய-பரிசோதனை கருவிகளை மட்டுமே கொண்டு வர அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்துள்ளது.

அந்த கருவிகள், பயணிகளின் சொந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் அதனை கொண்டு வரலாம் எனவும் HSA கூறியுள்ளது.

தினசரி விமானங்களை இயக்க உள்ள SIA – ஆனால் இவர்கள் மட்டும் தான் செல்ல முடியும்!

எல்லைகளை மீண்டும் திறக்கும் சூழலில், சுய-பரிசோதனை கருவிகள் தேவையான ஒன்றாக இருப்பதாக HSA குறிப்பிட்டது.

சோதனை தொடர்பான தேவையை பூர்த்தி செய்ய பயணிகள் சுய-பரிசோதனை கருவிகளை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை HSA அங்கீகரிக்கிறது.

மேற்கண்ட அனுமதிகளின்படி, சிங்கப்பூருக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தங்களின் சொந்த சோதனைத் தேவைகளுக்காக அதிகபட்சமாக தலா 20 சுய பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட இந்த கருவிகள் மூலம், சிங்கப்பூர் வரும் பயணிகள் 14 நாட்களுக்குள் தினசரி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று HSA கூறியது.

ஜன. 1 முதல் சிங்கப்பூரில் இருந்து செல்ல முடியாது – தடை விதித்த நாடு