வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

File Photo: Chennai Airport

சீனாவில் பரவி வரும் ஓமிக்ரான் உருமாறிய பிஎஃப்.7 (BF.7) கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசு நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு சுற்றறிக்கை மூலம் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கட்டுமான தளத்தில் விபத்து… பலத்த சத்தம் – பதறிய ஊழியர்கள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

அந்த வகையில், வெளிநாட்டு பயணிகள் தமிழகம் வரும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 14 நாட்களில் இருந்து அறிகுறிகளுடன் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடைய நபர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களையும் தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்துதல், நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்ட நபர்களுக்கு 5 மற்றும் 10வது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், வழிகாட்டு நெறிமுறையை தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணி- விமான பணிப்பெண் இடையே கடும் வாக்குவாதம்! (வைரலாகும் வீடியோ)

அனைத்து சர்வதேச பயணிகளும் ‘ஏர் சுவிதா’ இணையதளத்தில் சுய விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும். பயணத் தேதிக்கு முந்தைய 14 நாட்களுக்கான பயண விவரத்தைப் பதிவிட வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று இல்லை என முடிவு வந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாதிப்புகள் கொண்ட நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2%பேருக்கு உத்தேச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அறிகுறிகள் இருப்பது உறுதியான வெளிநாட்டு பயணிகள் மருத்துவ உதவிக்கு 104, மற்றும் 044- 29510400, 044- 29510500, 9444340496, 8754448477 ஆகிய மாநில கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.