10 நாடுகளுக்கான கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர் – இனி அவர்கள் சிங்கப்பூர் பயணிக்கலாம்!

(Photo by David GRAY / AFP)

போட்ஸ்வானா, ஈஸ்வதினி, கானா, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையலாம்.

மேற்கண்ட நாடுகளுக்கு பயணத் தடையை நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) சிங்கப்பூர் நீக்கியது.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை

கடைசி 14 நாட்களுக்குள் இந்த நாடுகளுக்கான பயணம் மேற்கொண்ட பயணிகள் தற்போது சிங்கப்பூர் நுழைய மற்றும் இடைவழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.

முன்னர், ஓமிக்ரான் பாதிப்புகள் பற்றிய ஆரம்ப கட்ட தகவல்களைத் தொடர்ந்து, இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால வருகையாளர்களுக்கு சிங்கப்பூர் நுழைய நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது Omicron கிருமி உலகம் முழுவதும் பரவலாகப் பரவி வருவதால், தடை நீக்கப்பட்டது என்று MOH தெரிவித்துள்ளது.

இந்த நாடுகள் “வகை IV” இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இந்த பயணிகள் அது தொடர்புடைய எல்லை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

தடுப்பூசி போடவில்லை என்றால் ஊழியர்கள் பணியிடத்திற்கு செல்ல முடியாது!