புனித வெள்ளி விடுமுறைக்காக மலேசியாவிற்கு செல்லும் சிங்கப்பூர் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு – Woodlands சோதனைச் சாவடி

woodlands johor bahru

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிங்கப்பூர் – மலேசியா எல்லைகள் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. எல்லைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்ட பிறகு (April 14) வியாழக்கிழமை Woodlands சோதனைச் சாவடியில் மலேசியாவிற்கு செல்லும் பயணிகளின் வரிசை பாம்பு போல் நீண்ட வரிசையாக உள்ளது.

புனித வெள்ளியை முன்னிட்டு மலேசியாவுக்கு செல்லும் மக்கள் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் கூடியதால் சோதனைச் சாவடியில் வரிசையாக கடந்து செல்வதற்கு கூட்டத்தின் நெருக்கடியை கட்டுபடுத்த மற்றும் மக்களை வழிநடத்த காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.

சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருப்பது பயணிகளை ஆத்திரமடையச் செய்வதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். விடுமுறைக் காலத்தின்போது சிங்கப்பூரர்கள் Johor Bahru-விற்கு ஒரு குறுகிய பயணத்திற்கு செல்ல விரும்புவார்கள் என்பதால் சோதனைச் சாவடியில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது.சுங்கச் சாவடியை கடந்து விட்டால் அதற்குப் பின்பு வேகமாக சென்று விடலாம் என்றும் பயணிகள் கூறினர்.

JB-ஐ நோக்கிப் பயணிக்கும் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் சிங்கப்பூர் உரிம அட்டையை கொண்டிருந்தன. சோதனைச்சாவடியில் காத்திருப்பு நேரம் உட்பட கிட்டத்தட்ட 30 நிமிடங்களில் கடந்து செல்ல முடிந்தது என்று கூறினர்.வாகனத்தை ஓட்டிச் சென்றவர்கள் குறைந்த நேரம் மட்டுமே சோதனைச்சாவடியில் காத்திருக்க வேண்டி இருந்ததாகவும் கூறினர்.