பூங்காவில் விழுந்த 20மீ உயர மரம் – அதிஷ்டவசமாக தப்பிய ஆடவர்

tree-fall-bishan-park
Photo Credit: Lianhe Wanbao & Google Maps

சிங்கப்பூரில் உள்ள ஒரு பூங்காவில் 20மீ உயரமுள்ள மரம் ஒன்று விழுந்தது, அப்போது அவ்வழியாக ஜாக்கிங் ஓட்டம் சென்ற ஆடவர் அதிஷ்டவசமாக தப்பினார்.

அவர் மரம் விழும் சத்தத்தைக் கேட்ட உடனே தன்னை சுதாரித்து கொண்டதாக கூறியுள்ளார்.

ஹௌகாங்கில் மின்-சைக்கிள் மோதி விபத்து – மருத்துவமனையில் பெண் அனுமதி

இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 13ஆம் தேதி அன்று சனிக்கிழமை இரவு நடந்தது.

“உண்மையில், முன்னோக்கி ஓடும்போது, ​​​​நான் சரியான திசையில் இருந்தேனா என்பது கூட எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அந்த இடம் இருட்டாக இருந்தது.”

“மேலும், மரம் எங்கு விழுந்தது என்றும் என்னால் பார்க்க முடியவில்லை ” என அவர் கூறினார்.

“மரம் விழும் நேரத்தில், அந்த இடத்தை விட்டு ஓட வேண்டும் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்தது, அந்த மரம் சுமார் 20 மீட்டர் நீளமாக இருப்பதைக் நான் கண்டேன்.”

மேலும், “என்னுடைய இரண்டு கைகளாலும் பிடிக்க முடியாத அளவு அந்த மரம் உயரமாக இருந்தது, அதை நினைத்தால் மரண பயம் ஏற்படுகிறது” என்றார் அவர்.

அவர் ஓட்டத்தில் ஆர்வமுள்ளவராக இருந்ததாகவும், கடந்த ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஓடுவதாகவும் கூறினார்.

கெயிலாங்கில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கை – 37 பேர் பிடிபட்டனர்