மகாத்மா காந்தி நினைவு தினம்- சிங்கப்பூருக்கான இந்திய தூதர் மரியாதை!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

ஜனவரி 30- ஆம் தேதி அன்று மகாத்மா காந்தியின் 75- வது நினைவு தினத்தையொட்டி, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டத் தலைவர்கள் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர். அதேபோல், இந்தியா முழுவதும் உள்ள காந்தி சிலைகள் மற்றும் அவரது திருவுருவப் படங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் மரியாதைச் செலுத்தப்பட்டது.

‘தைப்பூசத் திருவிழா’- ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்கள் மற்றும் காந்தியின் சிலைகளுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மரியாதைச் செலுத்தினர்.

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் (Race Course Lane) உள்ள மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்திற்கு சென்ற சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்தின் அதிகாரிகளும் காந்தியின் சிலைக்கு மரியாதைச் செலுத்தினர்.