திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை குறித்த விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

McDonald’s விற்பனை மையங்களில் NS55 கிரெடிட்களை ரிடீம் செய்து கொள்ளலாம் – மேலும் ஒரு வழி !

அதன்படி, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், IX 682 என்ற விமானத்தை இயக்கி வருகிறது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில், செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ஒரு விமான சேவையையும், மற்ற நாட்களில் இரண்டு விமான சேவைகளையும் வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து இருந்து திருச்சிக்கு IX 689, IX 681, IX 685 ஆகிய விமானங்களை இயக்கி இயக்கி வருகிறது. சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் நவம்பர் 1- ஆம் தேதி முதல் தினசரி விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

PSP நடத்திய தேசிய தின விருந்து – எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர் !

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.