திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

Photo: IndiGO Official Twitter Page

திருச்சி மற்றும சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதேபோல், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines), ஏர் ஏசியா நிறுவனம் (AirAsia) ஆகிய இந்திய விமான நிறுவனங்கள், இந்த வழித்தடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. அதேபோல், இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlines), மலேசியாவைச் சேர்ந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் (Malindo Airlines) ஆகிய விமான நிறுவனங்களும் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதில் சிங்கப்பூரர்களை எடுக்கலாமே” – சிங்கப்பூரர்கள் வாதம்: துணைப் பிரதமர் விளக்கம்

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு, சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.