திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ்!

Photo: IndiGO Official Twitter Page

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை இரு மார்க்கத்திலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines) வழங்கி வருகிறது. இதில் ஒரு விமான சேவை மட்டும் நேரடி விமான சேவை ஆகும். மற்ற விமான சேவைகள் சென்னை, பெங்களூரு வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு ஊழியர்கள் கைது

இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட போகிறார்களா..? – விளக்கும் நிறுவனம்

தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், திருச்சி, சிங்கப்பூர் இடையே பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.