‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- மார்ச் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). இந்த விமான சேவை Non- VTL ஆகும். திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற விமானமும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

கனடா வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசிய சிங்கப்பூர் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

இந்த நிலையில், இவ்வழித்தடத்திற்கான மார்ச் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவையின் பயண அட்டவணை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் மார்ச் மாதத்தில் 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11, 14, 15, 16, 17, 18, 21, 22, 23, 24, 25 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் மார்ச் மாதத்தில் 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 15, 16, 17, 18, 19, 22, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

விமானம் ரத்து: Scoot, SIA விமானங்களை சாடிய வெளிநாட்டவர் – ஒழுங்கீனமில்லை என காட்டம்

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு குறைந்தபட்ச விமான பயண கட்டணம் ரூபாய் 7,266.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.

கோயில் வாசலில் குழந்தை மீது பலகையை தட்டி விட்டு தாக்குதல் (வீடியோ): போலீசார் கடும் எச்சரிக்கை

Non-VTL விமான சேவை என்பதால், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக RT-PCR/ ART பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், Non-VTL பயணிகளுக்கான சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பயணிகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.