‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி இரண்டு விமான சேவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot) வழங்கி வருகிறது. இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும்.

கடையில் இருந்து திடீரென விழுந்த கண்ணாடி… உடைந்து சிதறியதில் காயமுற்ற ஊழியர்கள்

இந்த வழித்தட விமான சேவைக்கான, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட், பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வருவதாலும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும் பயணிகளின் உகந்த நேரத்தில் விமான சேவையை வழங்கி வருவதாலும் ஸ்கூட் நிறுவனத்தின் விமான சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தங்க கைச்செயினை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர் – அடகு கடையில் கைவரிசை: CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்

ஸ்கூட் நிறுவனம், தமிழகத்தின் கோவை, திருச்சி விமான நிலையங்களில் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.