‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: IndiGO Official Twitter Page

இந்தியாவின் திருச்சி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ். குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே தினசரி அதிகளவில் விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாக இது உள்ளது.

பயந்து பதுங்கிய நாயிடம் வீரத்தை காட்டும் பராமரிப்பாளர் – நரகத்திற்கு வரவேற்கிறோம்னு டயலாக் வேற !

அந்த வகையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி 5- க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இதில், ஒரு விமான சேவை மட்டுமே திருச்சி, சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை ஆகும். மற்ற விமான சேவைகள் சென்னை, பெங்களூரு வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு வருகின்றனர்.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் வேலையில் உள்ள தமிழ் ஊழியர்… சொந்த வீட்டில் நடந்த கொடுமை – சோகத்தில் குடும்பம்

விமான பயண கட்டணம், விமான பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.