திருச்சி, சிங்கப்பூர் இடையே ‘ஸ்கூட்’ விமான சேவை- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ விமான நிறுவனம் (FlyScoot), இந்தியாவின் திருச்சி, கோவை, விசாகப்பட்டினம், அமிர்தசரஸ், திருவனந்தபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் VTL மற்றும் NON- VTL விமான சேவையை வழங்கி வருகிறது.

எல்லைகளைத் திறப்பதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பு!

குறிப்பாக, திருச்சி இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமான நிறுவனம் இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இவ்வழித்தடத்திற்கான மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு குறைந்தபட்ச விமான பயணக் கட்டணமாக ரூபாய் 5,999.63 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் விமான நிறுவனத்தின் இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழமான வடிகாலில் விழுந்த சிங்கப்பூர் பெண்ணின் AirPod: கனமழையிலும் ஓடிச்சென்று உதவிய “வெளிநாட்டு ஊழியர்”!

பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, VTL விமானங்களா அல்லது NON-VTL விமானங்களா என்பதை நன்கு அறிந்துக் கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.