‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot).

சிங்கப்பூர்- தமிழ்நாடு பொருளாதார வட்டமேசைக் கூட்டத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரண்டு விமான சேவைகளையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி இரண்டு விமான சேவைகளையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து நெருங்கி வரும் நிலையில், இந்த வழித்தட ஸ்கூட் விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.