திருச்சி, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). இந்த விமான சேவையானது Non- VTL ஆகும். இவை நேரடி விமான சேவை ஆகும். இவ்வழித்தடத்திற்கான விமான பயணத்திற்கான மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான சேவை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு ‘VTL’ விமான சேவை- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

அதேபோல், இண்டிகோ நிறுவனம் (Indigo), திருச்சி, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து Non-VTL விமான சேவையை வழங்கி வருகிறது. நாள்தோறும் மூன்று இண்டிகோ விமானங்களும், சில தினங்களில் நான்கு இண்டிகோ விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு விமானம் மட்டும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை வழங்கி வருகிறது. மற்ற விமானங்கள் திருச்சியில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கும், திருச்சியில் இருந்து பெங்களூரு வழியாக சிங்கப்பூருக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டவைத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு goindigo.in என்ற இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பாக ஏழு வெளிநாட்டவர்கள் கைது – மரண தண்டனையை கூட எதிர்கொள்ள நேரிடலாம்!

Non-VTL விமான சேவையில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.