‘திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார் இந்திய பிரதமர்!’

'திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார் இந்திய பிரதமர்!'
Twitter Image

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அசால்ட்டாக வளம் வந்த “கருநாகப்பாம்பு” – சிங்கப்பூரில் அதிகம் காணப்படாத காட்சி

பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் சார்பில் ரூபாய் 1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விமான நிலையத்தின் புதிய முனையத்தின் கட்டுமான பணிகளை கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 10- ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் ஜனவரி 02- ஆம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில், பீக் அவரில் ஒரே நேரத்தில் சுமார் 2,500- க்கும் மேற்பட்ட பயணிகளை கையாள முடியும். சுமார் 61,634 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முழுமையான சோலார் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 1,000 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும், இந்தியாவின் கலை, கலாச்சாரம், கட்டட திறனை உலகுக்கு பறைசாற்றும் வகையிலான வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது.

உலகிலேயே மிக பரபரப்பான விமான நிலையம் துபாய்.. 5 வது இடத்தில் சாங்கி விமான நிலையம்

குறிப்பாக, புதிய முனையத்தின் கோபுரங்கள் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

புதிய முனையம் பயன்பாட்டு வரும் போது, திருச்சி- சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை விமான நிறுவனங்கள் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது.