திருச்சி விமான நிலையத்தில் 929 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் (Trichy International Airport) துபாய், ஷார்ஜா, அபுதாபி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையையும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ள சூரிய அஸ்தம யோகாவில் பங்கேற்குமாறு அழைப்பு!

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 7- ஆம் தேதி அன்று இரவு மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி ஏர் ஏசியா நிறுவனத்துக்கு (Air Asia) சொந்தமான விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, பயணி ஒருவர் தனது உள்ளாடையில் 623 கிராம் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனை முழுவதும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 37,97,604 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் சாங்கி ஏர்போர்ட் 9வது இடம் – முதல் இடம் எது தெரியுமா?

அதேபோல், ஏப்ரல் 8- ஆம் தேதி அன்று காலை ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (Air India Express) திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பயணி ஒருவர் தனது உடலில் 306.5 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சுமார் 18,79,458 ரூபாய் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், தங்கத்தைக் கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.