‘திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோலாலம்பூருக்கு ஸ்கூட் விமான சேவை’- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), “திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோலாலம்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை விமான நிறுவனம் இயக்கி வருகிறது.

முகத்தில் எச்சில் துப்பிய முதலாளி… கடுப்பில் கத்தியால் தாக்கி உயிரை எடுத்த பணிப்பெண் – 16 ஆண்டுகள் சிறை

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையேயான விமான சேவைக்கு மிகக் குறைந்த கட்டணத்தையே விமான நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக ரூபாய் 12,916 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோலாலம்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக ரூபாய் 16,672 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா காலமானார்!

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.