திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமானது ஸ்கூட் விமான நிறுவனம் (FlyScoot). இந்நிறுவனம், திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவைச் சேவை வழங்கி வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் இவ்வழித்தடத்தில் தினசரி விமான சேவையை வழங்க உள்ளது. ஏற்கனவே, இயக்கப்படும் 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் A 320 விமானத்துக்கு பதிலாக, 232 இருக்கைகள் கொண்ட கொண்ட ஏர்பஸ் A 321 neo விமானத்தைப் பயன்படுத்த உள்ளது.

இந்திய பயணிகளை ஈர்க்க சிங்கப்பூர் திட்டம்: “தமிழ்நாடு தான் டார்கெட்” – மாஸ் காட்டும் தலைநகர் சென்னை!

வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கவுள்ளது ஸ்கூட் நிறுவனம். வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு VTL விமான சேவையை வழங்கவுள்ளது. மற்ற நாட்களில் Non- VTL விமான சேவையை வழங்கவுள்ளது. இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும்.

‘சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக திருப்பதிக்கு விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .