திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு ‘VTL’ விமான சேவை- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (FlyScoot) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் VTL மற்றும் Non-VTL தினசரி விமான சேவை வழங்கப்படும். அதன்படி, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் VTL விமான சேவை வழங்கப்படும். மற்ற நான்கு நாட்களில் Non-VTL விமான சேவை வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்களைக் கொல்ல போறேன்” என போன் காலில் மிரட்டிய ஆடவர்: பெரிய ஆயுதத்துடன் கைது – சிறை!

இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கு கம்பத்தில் மோதி கார் விபத்து: சேதமடைந்த காரில் இருந்து வெளியேறிய 3 பேர் – வீடியோ

பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, மிகவும் கவனமாக Non-VTL விமான சேவையா, VTL விமான சேவையா என்பதை நன்கு அறிந்து முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.