சாலையை கடக்க தயாராக இருக்கும் சைக்கிள்…ரெட் லைட்டை மதிக்காமல் சென்ற லாரி (காணொளி) – நெட்டிசன்கள் காட்டம்

Truck driver beats red light

சாலையை கடக்க சைக்கிள் தயாராக இருப்பது தெரிந்தும், லாரி ஓட்டுநர் சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 31 அன்று லோரோங் 1 கெய்லாங்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதன் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரில் குளுகுளு குளுமையுடன் தொடங்கிய புத்தாண்டு… வெப்பநிலை 23°C குறையும்!

SG Road Vigilante என்ற ஃபேஸ்புக் பக்கத்தால் இந்த வீடியோ வெளியிடப்பட்டது, இது இணையவாசிகள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேஸ்புக் பயனர்கள் பலர் கேள்வி எழுப்பினர். “போக்குவரத்துச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன, ஆனால் இப்போதெல்லாம் அது செயல்படவில்லை. ஏன்?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விபத்து நடந்திருந்தால் யாராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பலர் கோபத்தை வெளிப்படுத்தினர்.

வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுனரை காணவில்லை – போலீசார் விசாரணை